லண்டன்:கொரோனாவைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு, 55,'கொரோனா' வைரஸ் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதால், தனிமையில் இருந்த அவர், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமையில் இருந்து, பணிகளை கவனித்து வந்தார். கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டதால், அவர் லண்டனில் உள்ள மருத்துவமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நோயின் தொற்று அதிகரித்து காணப்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதையறிந்த பிரதமர் மோடி, தனது டுவிட்டரில் கூறியது, கொரோனா பாதிப்பால் அனுமதிக்க பட்டுள்ள போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெறுங்கள். விரைவில் நீங்கள் பூரண குணமடைந்து மருத்துவமனையில்இருந்து வெளி வருவீர்கள் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் போரிஸ் ஜான்சன் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை