புதுடில்லி: உலக சுகாதார நாளில், கொரோனாவுக்கு எதிராக தைரியத்துடன் முன்னிலையில் இருந்து போரிடும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: உலக ஆரோக்கிய தினமான இன்று, மற்றவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் சிறந்த வாழ்க்கைக்காக பிரார்த்திப்பதோடு மட்டும் அல்லாமல், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தைரியத்துடன் முன்னிலையில் இருக்கும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதை உறுதிபடுத்துவோம்.
இந்த, உலக ஆரோக்கிய தினத்தில், நம்மையும், மற்றவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் சமூக விலகல் கடைபிடிப்பதை உறுதி செய்வோம். ஆண்டு முழுவதும், தனிநபர்களின் உடல்நலனில் கவனம் செலுத்துவதற்கு, இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.